பினாங்கு குழந்தைகள் நேச நகரங்கள் கணக்கெடுப்பிற்கு உங்களை வரவேற்கிறோம்.

இந்தக் கணக்கெடுப்பு, பினாங்கில் வாழும், பயிலும், விளையாடும் வளரும் குழந்தைகளின் தினசரி வாழ்க்கையைப் பற்றியது. இந்த கணக்கெடுப்பு, திங்க் சிட்டி அமைப்பால் பினாங்கு மாநகர சபை (MBPP), செபராங் பிறை நகர சபை (MBSP) மற்றும் யுனிசெஃப் (UNICEF) மலேசியா ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட, பினாங்கின் குழந்தை நேய நகரங்கள் முன்முயற்சிக்கான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகும். பினாங்கில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி நாங்கள் மேலும் அறிய விரும்புகிறோம் — எது சிறப்பாகச் செயல்படுகிறது; எதை இன்னும் மேம்படுத்தலாம்; மேலும் உங்கள் நகரத்தை ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான இடமாக மாற்றுவது எப்படி என்பதையும் அறிய விரும்புகிறோம்.

இந்தக் கணக்கெடுப்பில் இரண்டு பிரிவுகள் உள்ளன:
  • ஒன்று பெற்றோர்/பாதுகாவலர்களுக்கானது
  • மற்றொன்று 10 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானது.
நீங்கள் உங்கள் குழந்தையுடன் சேர்ந்து இந்தக் கணக்கெடுப்பை நிரப்பினால், முதலில் உங்கள் பிரிவுக்குப் பதிலளித்துவிட்டு, பிறகு உங்கள் குழந்தையை அவர்களுடைய பிரிவுக்குப் பதிலளிக்க விடுங்கள். உங்களுக்கு 10 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தை இல்லை என்றால், நீங்கள் பெற்றோருக்கான பிரிவை மட்டும் நிரப்பலாம்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்
கணக்கெடுப்பின் ஒவ்வொரு பகுதியையும் பூர்த்தி செய்ய சுமார் 10–15 நிமிடங்கள் ஆகும். இதில் சரியான அல்லது தவறான பதில்கள் என்று எதுவும் இல்லை — உங்கள் நேர்மையான கருத்துக்களையும் அனுபவங்களையும் மட்டுமே நாங்கள் அறிய விரும்புகிறோம். உங்கள் பதில்கள், குழந்தைகளின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், உள்ளூர் சேவைகள், இடங்கள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தவும் எங்களுக்கு உதவும்.

உங்களுக்குச் சங்கடமாக இருந்தால்
சில கேள்விகள் உங்களைத் தனிப்பட்ட முறையில் சிந்திக்க வைக்கக்கூடும் அல்லது கடினமான கருத்தாக இருக்கலாம். நீங்கள் எந்தக் கேள்வியையும் தவிர்க்கலாம் அல்லது எந்த நேரத்திலும் பதிலளிப்பதை நிறுத்தலாம். பதிலளித்த பிறகு நீங்கள் மன வருத்தம் அல்லது கவலை அடைவதாக உணர்ந்தால், இந்தக் கணக்கெடுப்பின் முடிவில் இணைக்கப்பட்டுள்ள ஆதரவு அமைப்புகளில் ஒன்றைத் (இலவச மற்றும் இரகசியம் காக்கப்படும் உதவி) தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் பள்ளிக்காக RM1,000 வெல்லுங்கள்!!
இந்தக் கணக்கெடுப்பை நிறைவு செய்வதன் மூலம், உங்கள் பள்ளி அல்லது சமூகத்தை குழந்தைகளுக்கு சிறந்ததாக மாற்றும் நோக்கில் அமையக் கூடிய, குழந்தைகளால் வழிநடத்தப்படும் ஒரு திட்டத்தை உருவாக்க , உங்கள் பிள்ளையின் பள்ளிக்கு RM1,000 மானியம் கிடைக்கக்கூடும். பினாங்கில் உள்ள 10 பள்ளிகள் வெற்றி பெறும் வாய்ப்பு!
பினாங்கை குழந்தைகளுக்கு மிகவும் உகந்த இடமாக மாற்ற உதவியதற்கு நன்றி!
தனியுரிமை & ஒப்புதல்

Question Title

பங்கேற்பு தன்னார்வமானது மற்றும் பெயர்க் குறிப்பிடப்படாதது. பெயர்களோ அல்லது எந்த அடையாள விவரங்களோ சேகரிக்கப்படாது.

இந்தக் கணக்கெடுப்பு சர்வேமங்கி மூலம் (SurveyMonkey) பாதுகாப்பாக நடத்தப்படுகிறது. மேலும், மலேசியாவின் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் (PDPA) 2010-க்கு இணங்க, பினாங்கில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் நோக்கங்களுக்காக இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படும்.

இந்தக் கணக்கெடுப்பை நிறைவு செய்வதன் மூலம், இந்த நோக்கங்களுக்காகத் தங்களின் பெயர்க்குறிப்பிடப்படாத பதில்களைப் பயன்படுத்த நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், யான் செங் தான் அவர்களை yancheng.tan@thinkcity.com.my என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது +604 261 3146 (வாட்ஸ்அப்) என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

 
5% of survey complete.

T