KRYSS Network ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த அமைப்பு மலேசியாவில், குறிப்பாக பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிராக நிகழும் சமமற்ற, பாகுபாடான கருத்து, பேச்சு சுதந்திரத்தைக் கவனித்து ஆய்வு செய்கிறது. எங்கள் பணி, அனைவரும் நிகழ்நிலையில் எந்தத் துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கான பயம் இல்லாமல் தங்கள் வாழ்க்கை இயல்புகள், அனுபவங்கள், கருத்துகள் மற்றும் எண்ணங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த இணையத்தளம் பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதிப்படுத்துவது. 

நிகழ்நிலையில் நிகழும் பாலினம்சார் வன்முறைகளைக் (OGBV) களைய, அதற்கான ஆதாரங்களையும் அறிவையும் மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு படியாக, நடக்கும் வன்முறைகளை ஆவணப்படுத்துவதே இந்த ஆய்வின் நோக்கம். நிகழ்நிலையில் நிகழும் பாலினம்சார் வன்முறை என்பது தொழில்நுட்பம் மூலமாக மக்கள், குறிப்பாக பெண்கள், சிறுமிகள், ந,ந,ஈ,தி (நங்கை, நம்பி, ஈரர், திருனர்)/பால்புது (LGBTQ) ஆகிய சமூகத்திற்க்கு எதிராக நிகழும் துன்புறுத்தல் மற்றும் தீங்குகள் ஆகும். 

நிகழ்நிலையில் நிகழும் பாலினம்சார் வன்முறையின் ஒவ்வொரு சம்பவத்திற்கும் (அல்லது குற்றம் புறிந்தவருக்கும்) தனிப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

நிகழ்நிலையில் நிகழும் பாலினம்சார் வன்முறையின் அனுபவங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தலாம் மற்றும்/அல்லது கடினமாக இருக்கலாம் என்பதால், உங்களால் முடிந்தவரையிலான தகவல்களைப் பகிரலாம். மலேசியாவை இவ்வன்முறை இல்லா நாடாக்குவதை ஆதரித்து உதவும் உங்கள் விருப்பத்திற்கு நன்றிகள்.

Question Title

1. உங்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ள முடியுமா? (எ.கா. என்ன நடந்தது? யார் பாதிக்கப்பட்டது? யார் அந்த வன்முறையாளர்(கள்)? எப்போது அல்லது எந்த ஆண்டில் நடந்தது?)

Question Title

2. நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்(கள்), உங்களிடம் முதல் முறையாக வன்முறை நடத்தியவரா?

Question Title

3. இந்த வன்முறையாளர்(கள்) யார் என்று உங்களுக்குத் தெரியுமா? மேலும் விளக்கத் தயக்கம் இல்லை என்றால், கூடுதல் விவரங்களை வழங்க தயங்க வேண்டாம். (அவர்கள் யார்/பெயர்கள்/சமூக ஊடகத்தின் பயனர் பெயர் முதலியன.)

Question Title

4. இந்தப் பாலினம்சார் வன்முறை எந்த சமூகத் தளத்தில்(கள்) நடந்தது? (நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களைத் தேர்வு செய்யலாம்)

Question Title

5. உள்ளடக்கத்தை மீறும்/நிகழ்நிலையில் நிகழும் பாலினம்சார் வன்முறைகள் கொண்ட ஆவணங்களை (எ.கா. திரைவெட்டுகள்/படங்கள்/காணொளிகள்) எங்களோடு பகிர விரும்பினால், documentation.kryss@gmail.com-க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.  இந்த ஆவணங்களை மீண்டும் பார்ப்பது உங்களுக்கு அதிர்ச்சிகரமான அனுபவமாக இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நீங்கள் பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டும் பகிரவும்.

Question Title

6. பின்வரும் வன்முறைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எப்போவாவது நிகழ்நிலையில் அனுபவித்திருக்கிறீர்களா? உங்கள் பதிலுக்குப் பொருந்தும் அனைத்தையும் தேர்வு செய்யலாம்.

Question Title

7. நடக்கும் நிகழ்நிலை வன்முறையை எதிர்த்து இதுவரை என்ன செய்யப்பட்டுள்ளது? பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்திருந்தால், என்ன நடந்தது என்பதையும் அதற்கான பதில் நடவடிக்கைகளையும் விவரிக்கவும். பதிலைப் பொருத்தமான தேர்வு பெட்டிகளில் எழுதவும்/தேர்வு செய்யவும்.

Question Title

8. ஏதேனும் தகவலோ அல்லது அவதானிப்புகளோ இருந்தால் பகிரலாம். நீங்கள் மேலே குறிப்பிட்ட செயலை மேற்கொண்ட போது என்ன நடந்தது? நிகழ்நிலையில் நிகழும் பாலினம்சார் வன்முறைகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் குறைந்ததா? வன்முறை முற்றிலுமாக நின்றுவிட்டதா? நீங்கள் மேலும் வேறு வகையிலான பாலினம்சார் வன்முறைகளை எதிர்கொண்டீற்களா?

Question Title

9. சம்பவம் பற்றிய கூடுதல் தகவலுக்கு நாங்கள் உங்களை தொடர்பு கொள்ளலாமா? ஆம் எனில், உங்கள் பின்வரும் விவரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

Question Title

10. மேலும் ஏதேனும் தகவல்கள் அல்லது ஏதேனும் கேள்விகள் உள்ளதா?

உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் கதை சுருக்க வடிவில் மட்டுமே வழங்கப்படும், உங்களிடமிருந்து ஒப்புதல் பெறப்படும் வரை, உங்கள் பெயர் அல்லது அடையாளம் காணக்கூடிய பிற தரவு எந்த அறிக்கையிலும் பயன்படுத்தப்படாது.


விரைவில் நாங்கள் நிகழ்நிலையில் நிகழும் பாலினம்சார் வன்முறை குறித்த மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்துகிறோம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் உங்கள் வரவை உறுதிப்படுத்த இந்த இணைப்பைப் பயன்படுத்தவும். மின்னஞ்சல் மூலம் விவரங்களை உங்களுக்குத் தெரிவிப்போம்.
0 of 10 answered
 

T